டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 19 பேர் தனி வார்டுகளில் அனுமதி

டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 19 பேர் தனி வார்டுகளில் அனுமதி
Updated on
1 min read

டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 19 பேர் அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 27 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுடன் டில்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியிவர்களை கண்டறியும் பணிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 5 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோல் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தை சேர்ந்த டாக்டர் உட்ப இருவர், பேட்மாநகரை சேர்ந்த இருவர், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், கயத்தாறை சேர்ந்த ஒருவர் என்று 6 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 19 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனை முடிவில் இவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து தெரியவரும். இதனிடையே இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தனிமைப்படுத்தி, கிருமி நாசினி தெளிப்பு பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in