கரோனா பாதிப்பிலிருந்து விடுபட நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வேள்வி

படங்கள்: மு.லெட்சுமிஅருண்
படங்கள்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் மிருத்யுஞ்ஜய மந்திரஜப பாராயண வேள்வி இன்று நடைபெற்றது.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகமும், இந்தியாவும், உலகமும் விடுபடவும், உலக மக்களின் நன்மைக்காகவும் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இந்த வேள்வி நெல்லையப்பர் கோயிலில் காலை 7 மணி முதல் 9.30 மணிவரை நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் இதில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in