மதுரைக்கு தேனி கற்றுக்கொடுத்த பாடம்: 19 காய்கறிகள் அடங்கிய தொகுப்புப் பை ரூ.250- மாநகராட்சி 10 வார்டுகளில் இன்று தொடக்கம்

மதுரைக்கு தேனி கற்றுக்கொடுத்த பாடம்: 19 காய்கறிகள் அடங்கிய தொகுப்புப் பை ரூ.250- மாநகராட்சி 10 வார்டுகளில் இன்று தொடக்கம்
Updated on
1 min read

தேனியை போல் மதுரையில் காய்கறிக் கடைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் 19 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ‘பை’ வழங்கும் திட்டத்தை மாநகராட்சி முதற்கட்டமாக நேற்று 10 வார்டுகளில் தொடங்கி உள்ளது.

தேனி உழவர் சந்தையில் மக்கள் காய்கறிகள் வாங்க குவிவதை தடுக்கும் வகையில் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ‘பை’ வழங்கி அசத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியை தற்போது மற்ற மாவட்டங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

மதுரை மாநகராட்சிப்பகுதி கடைகளில் தேனியைப் போல், தற்போது காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து விசாகன் கூறுகையில், ‘‘உருளைக்கிழங்கு, சின்னவெங்காயம், பெரியவெங்காயம், முட்டைகோஸ், கேரட், கத்தரிக்காய், தக்காளி, பச்சைமிளகாய், வெண்டைக்காய், சௌசௌ, பீட்ரூட், கருவேலப்பிலை, மல்லி, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், தேங்காய், புதினா, இஞ்சி, புடலங்காய் என 19 வகையான காய்கறிகள் அடங்கிய மொத்த காய்கறி தொகுப்பு ‘பை’ ரூ.250 விலையில் மக்களைச் சென்றடையும் வகையில் மதுரை மாநகராட்சி முயற்சியை மேற்கொண்டு உள்ளது.

இப்பணியில் ‘வா நண்பா’ தன்னார்வலர்கள், ‘பெட்கிராப்ட்’ நிறுவனத்தினர் மற்றும் சில வழக்கறிஞர்கள் ஆகியோர், விளாங்குடி மொத்த காய்கறி விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் சேர்ந்து முதற்கட்டமாக இன்று 10 வார்டுகளில் 10 மாநகராட்சி நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது , ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in