அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கவும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கவும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் அளித்துள்ளது போதுமானதாக இல்லை. மீனவர்கள், மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட இப்பணியில் ஈடுபட்டு வரும் பலருக்கு இந்த உதவித்தொகை போதுமானது கிடையாது இதனை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி பேட்டி.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை இன்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்கரோனா தடுப்பு சிகிச்சை பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவ கல்லூரி முதல்வர் திருவாசகம் மணியிடம் கனிமொழி எம்பி வழங்கினார்.

பின்னர் மருத்துவமனை வளாகம் முன்பு அமைந்துள்ள அம்மா உணவகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் உடனிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர் பேசியவர், கரோனா சிறப்பு சிகிச்சையளிக்கும் பிரிவிற்கு லிஃப்ட் வசதி அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

அதிக மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளில் கூடுதலாக கிருமிநாசினி மருந்துகள் தெளிக்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த காலத்தில் அரசு ஆயிரம் ரூபாய் அளித்துள்ளது அது போதுமானதாக இல்லை. மீனவர்கள், மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட இப்பணியில் ஈடுபட்டு வரும் பலருக்கு இந்த உதவித்தொகை போதுமானது கிடையாது.

இதனை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்களை காக்க அரசு செயல்பட்டு வருகிறது இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அரசுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in