

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந் தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5 யூனிட்கள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது.
இதேபோல், என்டிபிஎல் அனல்மின் நிலையத்தின் 2 யூனிட்கள் மூலம் 1,000 மெகா வாட்டும், கோஸ்டல் எனர் ஜென் என்ற தனியார் அனல்மின் நிலைய த்தின் 2 யூனிட்கள் மூலம் 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் உற் பத்தி உச்சத்தில் இருக்கும். தற்போது கோடை வெயில் கொளுத்தியபோதிலும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பெரும் பாலான தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவ லகங்கள், மூடிக்கிடக்கின்றன. தமிழகத்தின் மின் தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. இதனால், அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக் குறைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மற்ற அலகுகள் நிறுத்திவைக்கப்பட்டு 2-வது அலகு மட்டுமே செயல்படுகிறது. கோஸ்டல் எனர்ஜென் தனியார் அனல்மின் நிலையத்தில் 2 அலகுகளுமே நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன.
அதேநேரத்தில் என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்கள் இயங்கினாலும் 600 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தமுள்ள 3,250 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நேற்றைய நிலவரப்படி வெறும் 810 மெகாவாட் அளவுக்கே மின் உற்பத்தி இருந்தது.