

தஞ்சாவூரில் வீதியில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றுபவர்களைக் கண்டுபிடிக்க, அவர்களின் வாகனங்களில் போலீஸார் பெயின்டால் அடையாள குறியீடு இடுகின்றனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நோயின் தாக்கத்தை உணராமல் அலட்சியமாக, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் அதிகமாக கூடுவதுடன், சிலர் வீதிகளில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த இருசக்கர வாகனங்களில் காவல் துறையினர் அடையாள குறியிட்டனர். தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் பகுதியில் நேற்று வந்த வாகனங்களுக்கு பெயின்ட் மூலம் அடையாளக் குறியிட்டு எச்சரித்தனர். அடையாளக் குறியீடு உள்ள வாகனங்கள் வீதிகளில் தேவையில்லாமல் மறுபடியும் சுற்றினால், பறிமுதல் செய்யப்படும் எனக் கூறி எச்சரித்து அனுப்பினர்.