Published : 01 Apr 2020 07:04 AM
Last Updated : 01 Apr 2020 07:04 AM

வீட்டுவசதி வாரியம், கூட்டுறவு சங்கங்களில் ஜூன் 30 வரை தவணை செலுத்தலாம்; பயிர்க்கடன், சொத்துவரி செலுத்த 3 மாதம் அவகாசம்: வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரை சந்தித்து விளக்கினார் முதல்வர் பழனிசாமி

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் பழனிசாமி நேற்று விளக்கினார்.

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் பயிர்க்கடன், மென்கடன் உள்ளிட்ட கடன் தொகைகளுக்கான தவணைத் தொகையை கட்ட 3 மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட குழுக்களுடன் மார்ச் 30-ம் தேதி கலந்தாய்வு செய்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அதன் விவரம் வருமாறு: கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற பயிர்க்கடன் தவணைத் தொகை, வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கான தவணைத் தொகை, அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெற்ற கடனுதவிகளுக்கான தவணைத் தொகை ஆகியவற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்தவும் சிப்காட் நிறுவனத் திடம் மென்கடன் பெற்றுள்ள நிறுவனங்கள் கடன் தவணை செலுத்தவும் சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட் டணம் செலுத்தவும் 3 மாத கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற ரூ.200 கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவி திட்டம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதன தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.

மோட்டார் வாகனச் சட்டப்படி உரிமங் கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகளுக் கான புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவ காசம் 3 மாதங்களுக்கு அதாவது ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எடைகள், அளவைகள் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளால் அமல் படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ஆகியவற்றின்கீழ் புதுப்பிக் கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவ காசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் போன்றவற்றுக்கான கால அவ காசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் வாடகை வீடு களில் குடியிருப்போர், வாடகை செலுத்து வதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத் துக்கு கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான வீட்டுவாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றை தடுக்க 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் இந் நோய் தொற்று 2-ம் கட்டத்தில் இருப்பதாக வும் அது 3-ம் கட்டத்துக்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது அவசியம் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்கள் நன்மைக்காகவும் குடும்பத்தின் நன்மைக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

ஆளுநருடன் ஆலோசனை

இதனிடையே கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் பழனிசாமி நேற்று விளக்கிக் கூறினார். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், ‘‘கரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டினார். அரசு சிறப்பான முறையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆளுநர் மகிழ்ச்சி தெரி வித்தார்’’ என்றார்.

‘‘டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். அதில் 800 பேரை கண்டறிந்துள்ளோம். செல்போன் எண் மட்டுமே உள்ளதால் அத னைக் கொண்டு அவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த குழுவை தனிமைப்படுத்தினால்தான் மேலும் கரோனா வைரஸை தடுக்க முடியும்’’ என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x