Published : 31 Mar 2020 06:42 PM
Last Updated : 31 Mar 2020 06:42 PM

மதுரையில் 2 'அம்மா' உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு: ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வாடும் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக எம்எல்ஏ ஏற்பாடு

மதுரை 

மதுரை கே.புதூர் அம்மா உணவகம் மற்றும் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் இன்று முதல் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடரங்கு முடியும் வரை சாப்பிடும் மக்களுக்கு தினமும் காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வாடும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் வடக்கு தொகுதி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.வி.ராஜன்செல்லப்பா இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இதுவரை காலை, மதியம் மட்டுமே உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது ‘கரோனா’ பரவும்நிலையில் வேலைக்குச் செல்ல முடியாத அடித்தட்டு மக்களுக்கு தடையின்றி உணவு கிடைக்கும்வகையில் கூடுதல் உணவுகள் சமைத்து வழங்கவும், கூடுதலாக இரவு வேளையிலும் உணவு வழங்க மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது மூன்று வேளையும் அம்மா உணவகங்களில் உணவுகள் தயார் செய்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கே.புதூர் அம்மா உணவகம் மற்றும் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் இன்று முதல் அங்கு சாப்பிடும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் கூலி வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாததால் அவர்கள் தினமும் இலவசமாக சாப்பிடுவதற்காக, அதற்காகும் பணத்தை மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா மாநகராட்சிக்கு செலுத்தி இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக அதிமுகவினர் தெரிவித்ததனர்.

அவர், தனது வடக்கு தொகுதிக்குட்பட்ட கே.புதூர் அம்மா உணவகம், தான் வசிக்கும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்திலும் இவர் அந்த ஏற்பாட்டை செய்துள்ள நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இவரைப் போல் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை ஏழை அடித்தட்டு மக்கள் இலவசமாக சாப்பிடுவதற்கு, ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x