திருப்பரங்குன்றத்தில் ஊரடங்கால் முடங்கிப்போன வாழை விவசாயம்: விலை போகாமல் கண்ணீரில் விவசாயிகள் 

திருப்பரங்குன்றத்தில் ஊரடங்கால் முடங்கிப்போன வாழை விவசாயம்: விலை போகாமல் கண்ணீரில் விவசாயிகள் 
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவால் திருப்பரங்குன்றம் பகுதி வாழை விவசாயிகள் வாழைக்கு விலை கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் சிந்தாமணி, சாமநத்தம், வில்லாபுரம், அவனியாபுரம், பெருங்குடி, வலையங்குளம், வளையப்பட்டி நிலையூர் கூத்தியார்குண்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

ஆனால் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையில் வாழையிலை உபயோகமும் குறைவானது.

ஹோட்டல் மற்றும் மார்க்கெட் பகுதியில் வாழை இலைக்கு வரவேற்பு இல்லாததால் யாரும் வாங்கவில்லை என்ற காரணத்தினால் தோட்டத்திலேயே அறுக்கபடாமல் வாழை இலைகள் உள்ளது.

இதேபோல் வாழைக்காய் மற்றும் வாழைப்பழங்களை ஆகியவையும் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அழுகி நஷ்டம் அடையும் நிலையில் உள்ளது.

இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதிகளில் வாழை பயிரிட்டு உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவதில் இடர்பாடுகள் உள்ளது .

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் திருப்பரங்குன்றம் வட்டார விவசாய அலுவலகத்தில் மானியம் வழங்கப்படுவதில்லை என்றும் வட்டார அலுவலகத்தில் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக வாழை இலை வாழைத்தார் ஆகியவை மொத்த மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்கள் சிற்றுண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு வரவேற்பு இல்லாததால் வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

இதனால் பெருமளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றிற்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கிக் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளோம் ஆனால் அதற்கு முறையாக தள்ளுபடி மானியம் கிடைப்பதில் நிறைய இடையூறுகள் உள்ளது .

இந்த இடையூறுகளை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in