

கோவை அருகே உள்ள பாப்பம் பட்டி, கண்ணம்பாளையம் ஆகிய இரு கிராமங்களில் அமைக்கப் பட்டுள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென அங்குள்ள மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்விரு கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இளைஞர் பெருமன்றம், மாணவர் பெரு மன்றம் உள்ளிட்ட அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணம்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுக்கடை உருவபொம்மையை இறுதி அஞ்சலிக்கு செல்வதுபோல தூக்கிச் சென்ற பெண்கள், மதுக் கடையை முற்றுகையிட முயன்ற னர். போலீஸார் தடுத்ததால், பெண்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேபோல, பாப்பம்பட்டியில் இதே அமைப்பைச் சேர்ந்த பெண் கள் மதுக்கடைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்களை, போலீஸார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தின்போது, போலீ ஸார் தாக்கியதில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மார்பில் அடி விழுந்ததாம். இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகி லிருந்த தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.