

ராமநாதபுரம் மாவட்டம், கீழக் கரையில் காவலராக இருப்பவர் சுரேஷ். இவரது நண்பர் பரமக்குடி அருள்ராஜன். இருவரையும் சில மாதங்களுக்கு முன்பு, வெளி நாடுகளைச் சேர்ந்த ஆன்டர்சன், அபிஷ் ஆகியோர் தொடர்பு கொண் டனர். அப்போது, இணையத்தில் அந்நியச் செலவாணி முதலீட்டில் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டினர்.
மேலும் ஈரோட்டைச் சேர்ந்த மென்பொறியாளர்களான பிரவீன்குமார், விஸ்வநாதன் ஆகி யோரை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளனர். இதை நம்பிய சுரேஷும், அருள்ராஜனும் அவர் களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறியபடி, கடந்த ஆண்டு இணையதள வங்கிப் பரிவர்த்தனை மூலம் சிறிது, சிறிதாக சுரேஷ் ரூ.49.72 லட்சமும், அருள்ராஜன் ரூ. 7.50 லட்சமும் செலுத்தினர். முதலில் சிறிது லாபத்தை செலுத்திய பிரவீன், விஸ்வநாதன் ஆகியோர், ஒரு கட்டத்தில் சுரேஷ், அருள்ராஜனின் பணத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து இருவரது புகாரின் பேரில் எஸ்பி வீ. வருண்குமார் உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணை நடத்தி ஈரோட்டை சேர்ந்த பிரவீன்குமார் (42), விஸ்வ நாதனை (50) கைதுசெய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 9.70 லட்சம், 25 வங்கி அட்டைகள், 9 மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் பணத்தை பிட் காயின் (கிரிப்டோ கரன்ஸி) பரிவர்த்தனையில் முத லீடு செய்துள்ளது கண்டறியப் பட்டது.