Published : 31 Mar 2020 07:23 AM
Last Updated : 31 Mar 2020 07:23 AM

கரோனா வைரஸ் நிவாரணப் பணி; தினமும் 4,500 பேருக்கு உணவு வழங்கும் தொழிலதிபர்

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தானே அரிசி மூட்டைகளை தூக்கிச் சென்று, உணவு சமைத்து, மக்களுக்கு விநியோகிப்பதுபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது

அவர், கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் மேலாண்மை இயக்குநர் பி.சிவகணேஷ். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது கடின உழைப்பால் கோவை தொழிலதிபர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

கரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் சுமார் 4,500 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

தனது நிறுவன கேன்டீனில், சமையல் பணியில் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த அவரிடம் பேசியபோது,

"சாதாரண நிலையில் இருந்த என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது மக்கள்தான். இந்த உதவியை எனது கடமையாக கருதுகிறேன்.

காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவு சப்பாத்தி என ஒரு வேளைக்கு 1,500 பேருக்கு எங்கள் நிறுவனத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து, தினமும் 4,500 பேருக்கு மேல் கடந்த ஒரு வாரமாக விநியோகித்து வருகிறோம். இயல்புநிலை திரும் பும் வரை உணவு வழங்கப்படும்.

சமையலுக்கு அரிசி, மளிகைப் பொருள் மூட்டைகள் வந்தபோது பணியில் 5 பேர்தான் இருந்தனர். 250-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்ததால் நானும் அவர்களுடன் இணைந்து, மூட்டைகளை மாடிக்கு தூக்கிச் சென்றேன் . சமையல் பணியிலும் உதவுகிறேன்.

கோவை அரசு மருத்துவ மனையில், நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு தினமும் 1,500 உணவுப் பொட்ட லங்களை வழங்கி வருகி றோம்.ஆயிரக்கணக்கில் முகக் கவசங்கள் தயாரித்து இலவசமாக விநியோகிக்க உள்ளோம்", என்றார் சிவகணேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x