

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோயில் வடக்கு தெருவிலுள்ள மஹாலில் கே. செந்தில்- முத்துச்செல்வி ஆகியோரது திருமணம் 30.3.2020-ம் தேதி நடைபெறும் என்று மணமக்கள் வீட்டார் தரப்பில் ஆயிரம் பத்திரிகைகள் அச்சடித்து கடந்த சில மாதங்களாகவே உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் இத்திருமணத்தை எளிய முறையில் நடத்தவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 20 பேர் பங்கேற்ற இத் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமக்கள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.