கரோனா தடுப்பு: உண்டியல் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சிதம்பரம் சிறுமி  

உண்டியல் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமி.
உண்டியல் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமி.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது உண்டியல் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தச் சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து, மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை அனுப்பி உதவும்படி கேட்டுக்கொண்டனர்.

இதனைப் பார்த்துவிட்டு ஆங்காங்கே நாடு முழுவதும் ஏராளமானோர் பிரதமர் நிவாரண நிதிக்கும் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவரின் மகள் கௌசிகா. இவர் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி, தான் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்த உண்டியல் பணம் 1,555 ரூபாயை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கௌசிகா
கௌசிகா

கௌசிகா, அவரது தந்தையிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கக் கூறியுள்ளார்.

இதனையடுத்து ராஜபிரபு நெட் பேங்கிங் மூலம் அந்தப் பணத்தை சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்தச் சிறுமியின் செயலை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in