

மதுரையில் மக்கள் காய்கறிகள் வாங்க அதிகம் கூடுவதால் அதைத் தவிர்க்க, குடியிருப்புகளைத் தேடி வியாபாரிகளே காய்கறிகளைஹ் கொண்டு விற்பனை செய்ய நடமாடும் காய்கறிஹ் கடைகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் தூங்கா நகரம் என்ற பெயருக்கேற்ப 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும், அவர்கள் உழைப்பும் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது ‘கரோனா’ ஊரடங்கு உத்தரவு மற்ற மாவட்டங்களில் ஒரளவு கடைபிடிக்கும் நிலையில் மதுரையில் மட்டும் அது சாத்தியமில்லாமல் போனது. நேற்று அதன் உச்சமாக மக்கள், காய்கறிகள், இறைச்சி வாங்க நகர்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
அதனால், மாநகராட்சி நிர்வாகம் இன்று 30-ம் தேதி முதல் நகர்ப்பகுதியில் மக்கள் காய்கறி வாங்க குவிவதைத் தவிர்க்கும் வகையில் 100 வார்டுகளிலும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வியாபாரிகள் வாகனங்களில் காய்கறிகளைக் கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டத்திற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் குறிப்பிட்ட சில சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் இந்த நடமாடும் வானகங்களில் கொண்டு வரப்படும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள், தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கே தேடி வரும் இந்த நடமாடும் கடைகளில் காய்கறிகளை வாங்கி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மநகராட்சி ஆணையாளர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.