

கரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயை சந்தித்து அவர் இத்தொகையை வழங்கினார்.
கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வெள்ளிக்கிழமை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 67 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். மாவட்டந் தோறும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குற்ப்பிடத்தக்கது.