கரோனா ஊரடங்கால் காரைக்குடியில் மணமக்கள் உட்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்

கரோனா ஊரடங்கால் காரைக்குடியில் மணமக்கள் உட்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்
Updated on
1 min read

கரோனா நோய் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெறும் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட திருமண நிகழ்வு நடந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவகள் ராமு, உலகாம்பாள் தம்பதியினர். இவர்கள் மகன் பெரியசாமிக்கும் கல்லல் கிராமத்தை சேர்ந்த முருகன், வள்ளி தம்பதியினரின் மகள் கிருஷ்ணவேணிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் இரண்டு மாதத்துக்கு முன்பு நிச்சயக்கப்பட்டு திருமண மண்டபம் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

கரோனா வைரஸ் காரனமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிற பிறப்பிக்கப்பட்டு, தமிழகத்திலும் நடைமுறையில் உள்ளது.

இதனால், திருமணத்தை மண்டபத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என் முன் பணத்தை மண்டபம் உரிமையாளர் திருப்பிக் கொடுத்தார். இதனால் இன்று காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது.

மணமக்கள், உறவினர்கள் என 10 பேரை மட்டுமே கோயில் நிர்வாகம் அனுமதியளித்தது. இதையடுத்து எளிய முறையில், பெரியசாமி கிருஷ்ணவேணிக்கு திருமணம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in