சொந்த ஊருக்கு நடந்து சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்தார்; உதவிய கோவை போலீஸார்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய போலீஸார்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய போலீஸார்.
Updated on
1 min read

சிங்காநல்லூர் அருகே சாலையில் மயங்கிய கர்ப்பிணிக்கு மாநகர போலீஸார் உதவி செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே இன்று (மார்ச் 30) தம்பதியர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். அங்குள்ள சிக்னல் அருகே வந்தபோது திடீரென அப்பெண் மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த சிங்காநல்லூர் போலீஸார் அங்கு சென்று, அப்பெண்ணுக்கு முதலுதவி செய்து மயக்கத்தைத் தெளிய வைத்து விசாரித்தனர். அதில், அவர்கள் பல்லடம் அருகேயுள்ள கொடுமுடியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயர் விக்னேஷ்வரன் - மஞ்சுளா என்பதும் தெரியவந்தது.

கூலித் தொழிலாளர்களான இவர்கள், மஞ்சுளாவின் உடல் நலப் பரிசோதனைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் என்றும், பின்னர் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்ததும், தற்போது அங்கு கூட்டம் அதிகரித்ததால் சொந்த ஊருக்குச் செல்வதற்காக திருச்சி சாலையில் நடந்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர், சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், பிரத்யேக வாகனத்தை ஏற்பாடு செய்து தம்பதியரை அவரது ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in