Published : 19 Aug 2015 08:48 AM
Last Updated : 19 Aug 2015 08:48 AM

தூத்துக்குடி அனல்மின் நிலைய மின் உற்பத்தி சீரானது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

மிகப் பழமையான அனல்மின் நிலையம் என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் இந்த அனல்மின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகுகளில் பழுது ஏற்பட்டது. தலா 210 மெகாவாட் வீதம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பழுதுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவில் மீண்டும் மின் உற்பத்தி சீரானது.

அதேவேளை ஆண்டு பராமரிப்பு பணிக்காக 5-வது அலகில் மின் உற்பத்தி நேற்று காலை நிறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x