ஏப்.14 வரை தடையின்றி மின்சாரம்: அமைச்சர் தங்கமணி உறுதி

ஏப்.14 வரை தடையின்றி மின்சாரம்: அமைச்சர் தங்கமணி உறுதி
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஏப்.14-ம் தேதி வரை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது பலர் வீட்டில் இருந்து பணிபுரிவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏப்ரல் 14-ம் தேதி வரை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.

மின்துறை அத்தியாவசியமான சேவை என்பதால், மின்வாரியத்தில் பணிபுரியும் 80 சதவீத ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். இம்மாதம் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்களுக்கு ஏப்.14-ம் தேதி வரை பணம் கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, இதுவரை மின்வாரியத்துக்கு ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும். இவ்வாறு தங்கமணி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in