Published : 30 Mar 2020 07:45 AM
Last Updated : 30 Mar 2020 07:45 AM

கர்ப்பிணிகளுக்கு உதவ 102, 104 சிறப்பு தொலைபேசி எண்கள்; மாவட்டந்தோறும் ‘நெருக்கடி கால மேலாண்மைக் குழு'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு அரசு, தனியார் துறையினரைக் கொண்ட ‘நெருக்கடி கால மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்று முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களின் நடமாட்டத்தைக் குறைத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிற மாநில தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தையும் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களே செய்ய வேண்டும். இதை மாவட்ட ஆட்சி யர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளப் பட்டியலை தயாரிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 2 அல்லது 3 ஊழியர்களுக்கு மட்டும் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு அனு மதி அளிக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தொழில் வர்த்தக சபை, தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள், மருத்துவ வல்லுநர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு, தனியார் துறை முகவர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள், உணவு விநியோகஸ்தர்கள், அரசுசாரா அமைப்பினர், நுகர்வோர் பிரதிநிதிகள் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நெருக்கடிகால மேலாண்மைக் குழு' அமைக்கப்படும்.

கரோனா நோய் சமூக பரவலாக மாறுவதைத் தடுக்க, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் சுற்று வட்டாரப் பகுதிகள், ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக’ வரையறுக்கப்பட்டு தீவிர நோய் தடுப்பு நட வடிக்கைகள் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்படுகிறது.

முதியோர், சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை வீட்டில் உள்ள மற்ற நபர்கள் தொடர்பில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தேவையான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சுவாசக் கோளாறுடன் தனியார்மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டவர்களின் விவரங் களை சுகாதாரத் துறைக்கு அம் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் சில இடங்களில், குறிப்பாக மீன் அங்காடி,இறைச்சி, காய்கறி கடைகளில்சமூக விலகல் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x