கரோனா பாதிப்பை தடுக்க ‘கபசுர குடிநீர்’- பிரதமரிடம் பரிந்துரை செய்த சித்த மருத்துவர்கள்

கரோனா பாதிப்பை தடுக்க ‘கபசுர குடிநீர்’- பிரதமரிடம் பரிந்துரை செய்த சித்த மருத்துவர்கள்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கபசுரக் குடிநீரை கொடுக்கலாம் என்று சித்த மருத்துவர்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் தமிழகத்தில் 42 பேர் உட்பட, இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 பேர் இறந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகம் உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக அரசு மருத்துவர் களிடம் கேட்டபோது,

“கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அறிகுறிக்கு ஏற்ப, காய்ச்சலுக்கு பாராசிட்டமால், தொண்டைவலிக்கு அசித்ரோ மைசின், இருமலுக்கு டெக்ஸ்ரோமெத்தோபான், சளிக்கு, நெப்ராக் சிங், அலர்ஜி போன்வற்றுக்கு குளோர்பெனிரமைன் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரையும் அளிக்கப்படுகிறது. மருந்தே இல்லாத நிலையில், இந்த கூட்டு மருந்துசிகிச்சை ஓரளவு கை கொடுத்துள்ளது” என்றனர்.

இதற்கிடையில், ஆங்கில மருத் துவம் தவிர்த்து இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை செய்தார். அப்போது ஒவ்வொருவரும் தங்களுடைய சிகிச்சை முறைகளை குறித்து விளக்கினர். அதேபோல், தமிழக சித்த மருத்துவர்கள் கபசுரக்குடி நீரை பரிந்துரை செய்தனர். அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட பிரதமர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

பிரதமருடன் ஆலோசனையில் பங்கேற்ற மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரியும் (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவருமான எம்.பிச்சையாகுமார், சித்த மருத் துவர் கு.சிவராமன் ஆகியோர் கூறியதாவது:

மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்பே நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நாங்கள் பரிந்துரைத்த மருந்துகளின் அடிப்படையில் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு கொடுக் கலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதைப் பிரதமரிடம் தெரிவித்தோம்.

தொடர்ந்து தனிமைப்படுத்தப் பட்டோர், நோய் உறுதி செய்யப் பட்டு அறிகுறிகள் இல்லாதோருக்கு கபசுரக் குடிநீரைக் கொடுக்கலாம். சிகிச்சை பெறுவோருக்கு அலோபதி மருந்துடன் கூட்டு மருந்தாக கபசுரக் குடிநீரை கொடுப்பது குறித்து ஆலோசிக்க லாம்.

கடந்தகாலத்தில் கரோனா வைரஸ் மாதிரி, ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டபோது கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறோம். தற்போது, தமிழகத்தில் சில ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத் துவமனைகளில் கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய மருத்துவம் மற்றும்ஓமியோபதி துறை ஆணையர்கணேஷிடம் கேட்டபோது,

“மத்திய அரசின் ஆலோசனைப்படி தமிழகத்தில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளோருக்கு நிலவேம்புகுடிநீர் மட்டுமே கொடுக்கப்படு கிறது. இன்னும் கபசுரக் குடிநீர் கொடுக்கத் தொடங்கவில்லை. இந்த நோய்க்கு இந்த மருந்து என்று இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in