Published : 30 Mar 2020 07:18 AM
Last Updated : 30 Mar 2020 07:18 AM

ஊழியர்கள் பாற்றாக்குறையால் குறைந்த ஓட்டல்களே திறப்பு: சென்னை, புறநகரில் உணவு கிடைக்காமல் அவதி

தமிழக அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும், போதிய ஊழியர்கள் இல்லாததால் சென்னை, புறநகர்பகுதிகளில் குறைந்த அளவே ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. அதனால் உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் காய்கறி மற்றும் சிறு மளிகைக் கடைகள், பால் பூத்துகள் தவிர அனைத்து கடைகளையும் மூட தமிழக அரசு கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

தங்கும் விடுதிகள், சமைக்க வழி இல்லாத வீடுகளில் தங்கிஉள்ளவர்களின் நலன் கருதி, பார்சல் உணவு வழங்க மட்டும் ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

ஆன்லைன் மூலம் கொடுக்கப் படும் உணவு ஆர்டர்களை, வீடு களில் டெலிவரி செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன.

பயணிகள் வரத்து இல்லாமல் போனது, மக்கள் வெளியில் வரா தது, வீடுகளில் பார்சல் உணவுகளை டெலிவரி செய்ய அனுமதிக்காதது போன்ற காரணங்களால் லாபம் ஈட்டும் வகையில் வியாபாரம் இருக்காது என கருதிய ஓட்டல் உரிமையார்கள், அனைத்து ஓட்டல் களையும் மூடினர். அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓரிரு ஓட்டல்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சமைக்கப்பட்ட உணவை வீடு களில் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரிசெய்ய அரசு அனுமதி வழங்கி இருப்பதுடன், மருந்து கடைகள் போல நாள் முழுவதும் ஓட்டல்கள் இயங்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் சென்னை யில் குறைந்த அளவிலேயே ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஓட்டல் சங்கத் தலைவர் எம்.ரவி கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவுவதால், ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், ஓட்டல்பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும் வைரஸ் பரவஅதிக வாய்ப்புகள் உள்ளதால், அவர்களின் நலன் கருதி அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டன. ஊழியர்களை இங்கு தங்க வைப்பதிலும் ஆபத்து உள்ளது.

அதனால் அனைவரும் கடந்த 22-ம் தேதிக்கு முன்பாகவே சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனால் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் ஓட்டல்களை திறப்பதில் சிரமம் உள்ளது.

ஆங்காங்கே ஓரிரு ஓட்டல்கள் என, சுமார் 100 சிறு ஓட்டல்கள் மட்டும்தான் இயங்குகின்றன. பிரபல பெரிய ஓட்டல்கள் எதுவும் இயங்கவில்லை. ஊரடங்கு முடியும் வரை ஓட்டல்களைத் திறக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x