

வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:
பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். காலை 6 முதல் பிற்பகல் 2.30 மணிக்குள் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை, காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளவேண்டும். மக்கள் ஒரே இடத்தில் அதிகமாகக் கூடினால் நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஒரே நாளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி கூட்டம் கூடினால் சமுதாய தனிமைப்படுத்துதல், கைகழுவுதல் போன்றவற்றால் எந்தப் பலனும் கிடைக்காது.
விவசாயப் பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான அனைத்து நிறுவனங்கள், தமிழகத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் விவசாயம், தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கான தடை மார்ச் 28 முதல் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.