சிவகங்கை அருகே  4 கிராமங்களில் தவித்த 2000 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய 2 சமூக ஆர்வலர்கள்

ஒக்கூர் வாழ் குடும்பஅட்டைதாரர்களுக்கு ரெ.சேக்கப்பன் - நாகம்மை ஆச்சி தம்பதி 10 கிலோ அரிசி பையை வீடுதோறும் சென்று வழங்கினர்.
ஒக்கூர் வாழ் குடும்பஅட்டைதாரர்களுக்கு ரெ.சேக்கப்பன் - நாகம்மை ஆச்சி தம்பதி 10 கிலோ அரிசி பையை வீடுதோறும் சென்று வழங்கினர்.
Updated on
1 min read

சிவகங்கை அருகே 4 கிராமங்களில் உணவின்றி தவித்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு 2 சமூகஆர்வலர்கள் அரிசி வழங்கினர்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஊரடங்கால் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வேலைக்கு செய்யாததால் கூலித் தொழிலாளர்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

சிவகங்கை அருகே பச்சேரி, காந்திநகர், மீனாட்சிபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் ஆயிரம் குடும்பங்கள் உணவின்றி சிரமப்பட்டனர். இதையறிந்த சென்னையில் வசிக்கும் பச்சேரியைச் சேர்ந்த சமுக ஆர்வலர் சி.ஆர் .சுந்தராஜன் ஆயிரம் குடும்பங்களுக்கும் வீடு, வீடாகச் சென்று இலவசமாக தலா 10 கிலோ அரிசி பாக்கெட்டுகளை வழங்கினர்.

இதேபோல் சிவகங்கை அருகே ஒக்கூரில் 800 குடும்பத்தினர் உணவின்றி தவித்தனர்.

இதையறிந்த மதுரையில் வசிக்கும் ஒக்கூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேக்கப்பன் முதற்கட்டமாக 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

தொடர்ந்து சமையல் எண்ணெய், பருப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூக ஆர்வலர்கள் இருவரையும் கிராம மக்கள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in