

தமிழக அரசின் உத்தரவை ஏற்று, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதே வேளையில் உர விற்பனையாளர்களும், விசாயிகளும் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாது கடைபிடிக்க வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை அத்தியாவசியப் பொருட்களாகக் கருதி உரக்கடைகள் உடனடியாக திறக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை தவிர விவசாயப் பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள், விவசாயப் பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகள், விவசாய இயந்திர வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள் மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கம் போன்ற பணிகள் நடைபெறுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
உர விற்பனையாளர்களும், விசாயிகளும் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
உரம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வருவோர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கடைபிடிக்க வேண்டும். பிஒஎஸ் கருவி பயன்படுத்தும்போது கிருமிநாசினியை உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.