

தேனிமாவட்டம் கம்பம் பள்ளத் தாக்குப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னமனூர், ஓடைப் பட்டியில் விதையில்லா பச்சை திராட்சையும் விளைகிறது.
நீரும், குளிர்ச்சியான பருவ நிலையும் நிலவுவதால் இந்தி யாவிலேயே கம்பம் பள்ளத் தாக்குப் பகுதியில்தான் ஆண்டு முழுவதும் திராட்சை விளைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திராட்சைகளை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்ப முடியாமல் தோட்டங்களிலே பறிக்காமல் உள்ளன. இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ஒவ்வொரு 4 மாதத்துக்கு ஒருமுறை மக சூலுக்கு வரும். தற்போது இவற்றை யாரும் கொள்முதல் செய்யாததால் இப்பகுதியில் சுமார் ரூ.4 கோடி மதிப்பு திராட்சைகள் கொடியிலேயே அழுகி வருகிறது. உழவர்சந்தையில் விற்க அனு மதிக்க வேண்டும் என்றார்.