

தமிழக அரசின் ரூ.1000 மற்றும் இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்துக்காக விடுமுறை தினமான ஏப்ரல் 3-ம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கான வாராந்திர விடுமுறை வெள்ளிக் கிழமை (ஏப்.3) விடப்படுகிறது. இந்நிலையில் நிவாரணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்வழங்குவதற்காக அன்றைய தினம் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று அரசு அறிவித் துள்ளது. இதற்கு பதில் விடுப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அத்தியா வசியப் பொருட்கள், ரொக்கப்பணத்தை அவரவர் வீடுகளுக்கேசென்று வழங்கும் திட்டத்தை சில மாவட்டங்கள் அறிவித்துள்ளன. மாநிலம் முழுவதும் சமூக விலகல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட் டத்தை செயல்படுத்தவும் ஆலோசித்து வருவதாகக் கூறப் படுகிறது.