

லண்டனில் இருந்து காட்பாடிக்கு திரும்பிய பாதிரி யாருக்கு கரோனா நோய் அறிகுறி உறுதியான நிலையில், அவரால் யாருக்கெல்லாம் நோய்த்தொற்று பரவியுள்ளது என்பதை கண்டறிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 49 வயது பாதிரியாருக்கு, அத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிரியாரும் அவரது மனைவியும் கடந்த 17-ம் தேதி லண்டனில் இருந்து ஊர் திரும்பிய பின்னர், பாதிரியாருக்கு கடந்த 23-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால், சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனைவியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் பாதிரியாருக்கு வைரஸ் தொற்று இருப்பதும் அவரது மனைவிக்கு இல்லை என்பதும் தெரியவந் துள்ளது. தொடர்ந்து பாதிரியார் வீடு உள்ள பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘லண்டனில் இருந்து திரும்பிய இருவரின் நேரடி தொடர் பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவா கவே இருக்கிறது. இருவரும் கரோனா குறித்த விழிப்புணர்வுடன் இருந்திருக்கின்றனர். இருவரும் மருத்துவமனைக்கு வந்து சென்ற 2 ஆட்டோக்களில் இருந்தவர்கள், இவர்கள் வசிக்கும் பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் இருக்கும் நபர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களில் யாருக் காவது பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய 50 குழுக்களை அமைத்துள்ளோம். பாதிரியார் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்’’ என்று தெரிவித்தனர்.