கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பொருளுதவியுடன் முகக் கவசங்களும் செயற்கை சுவாசக் கருவிகளும் வழங்கலாம்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை இயக்குநர் வேண்டுகோள்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பொருளுதவியுடன் முகக் கவசங்களும் செயற்கை சுவாசக் கருவிகளும் வழங்கலாம்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை இயக்குநர் வேண்டுகோள்
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொருளுதவியுடன், முகக்கவசங்கள், செயற்கை சுவாசக்கருவி (வென்டிலேட்டர்) உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் வழங்கலாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கை மற்றும் வேலைஇழந்தோர், ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் நிவாரணம்வழங்கும் நடவடிக்கைகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதவிர, சமைத்த உணவுகளை நேரடியாக வழங்காமல், உள்ளாட்சி நிர்வாகங்களிடம் வழங்கலாம் என்று தன்னார்வலர்களுக்கு சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பதற்கான புதியஇடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் மருத்துவக் கருவிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே தன்னார்வலர்களின் உதவியையும் சுகாதாரத் துறை கோரியுள்ளது.

அதன்படி, கரோனா வைரஸ்தொற்றுநோய் நிவாரணப்பணிக்கு பொதுமக்கள் பொருளுதவி வழங்குவதுடன், பல்வேறு உதவிப் பொருட்களையும் வழங்கலாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்காப்பு பொருட்களான விசைத் தெளிப்பான், முகக்கவசங்கள், காலுறைகள்,துப்புரவு தொழிலாளர்களுக் கான பாதுகாப்பு பொருட்கள், கை சுத்தம் செய்யும் சோப்பு, திரவங்கள், கொசுவலைகள் வழங்கலாம்.

அதேபோல், மருத்துவ உதவிப் பொருட்களான தெர்மாமீட்டர், ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி, ஸ்டெதஸ்கோப், சிபிஜி கருவி, செயற்கை சுவாசக் கருவி, பல்வகை பரிசோதனைக் கருவி (மல்டி பாரா மானிட்டர்ஸ்) ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடம் நேரில் வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in