Published : 29 Mar 2020 07:01 AM
Last Updated : 29 Mar 2020 07:01 AM

ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலைகள்; வாகனங்கள் இயக்கப்படாததால் சென்னையில் காற்று மாசு குறைந்தது

சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படாமல் சாலைகள் வெறிச்சோடி இருப்பதால், சென்னையில் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 15-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வந்தாலும், கடந்த 24 நள்ளிரவு தொடங்கிவரும் ஏப்.14-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சிறு மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் பெயரளவில் இயங்கி வருகின்றன.

சென்னையில் மக்கள்தொகையை விட அதிகமாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனங்கள் மட்டும் சுமார் 30 லட்சத்துக்கு மேல் இருக்கும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது அரசுத் துறைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் தினமும் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் இருந்து வெளியேறும் நச்சு வாயு, மாசு ஆகியவை பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், உலக வெப்பம யமாதல், பருவநிலை மாற்றம் போன்றபாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதன் காரணமாக இந்தியாவில் மழைபெய்தால், ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுகிறது. புயல்களோ செயலிழந்துவிடும் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதற்கெல்லாம் வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையே காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது கரோனா நோய்த் தடுப்புநடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சென்னையில் வாகனங்கள் இயக்கம் இன்றிஅனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் விதிகளைமீறி புகையை கக்கி வந்ததொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை யில் காற்று மாசு வெகுவாக குறைந் துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த வாரியம் சார்பில் காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரான், 10 மைக்ரான் அளவு கொண்ட நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு, கந்தக டைஆக்சைடு போன்றவற்றை தினமும் அளவீடு செய்து, அதன் மொத்த சராசரிகாற்று தர குறியீடாக வெளியிடப்பட்டு வருகிறது.

வாரியத் தலைவர் அறிவிப்பு

அதனடிப்படையில் கடந்த பிப்.24-ம்தேதி பதிவான மாசு அளவுடன், மார்ச்25-ல் பதிவான மாசு அளவை ஒப்பிடுகையில் காற்று மாசு குறியீடு நினைத்து பார்க்கமுடியாத அளவுக்குசென்னையில் குறைந்துள்ளதாக அவ்வாரியத்தின் தலைவர் ஏ.வி.வெங் கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வட சென்னை பொதுமக்கள் கூறும்போது, ``இதேபோன்று மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். அன்று கைபேசி வழி இணைய சேவை, வைஃபை போன்றவற்றையும் முடக்க வேண்டும். மக்கள் ஊரடங்கின் மூலம்காற்று மாசு குறைவதுடன், இயற்கையான வாழ்க்கையை நினைவூட்டிக் கொள்வதாகவும் இருக்கும். இயந் திரத்தனமான வாழ்க்கையில் இது போன்ற நாட்களில் குடும்பத்தார், உறவினர், அண்டை வீட்டாருடன் நேரத்தை செலவிட்டு உறவாட ஏதுவாக இருக்கும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x