கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை மூடல்- ட்ரோன் மூலம் சமூக இடைவெளியைக் கண்காணித்த காவல்துறை

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

மதுரை அண்ணாநகரில் ‘கரோனா’வுக்கு ஒருவர் உயிரிழந்ததால் அங்குள்ள உழவர்சந்தை மூடப்பட்டது. அதனால், அருகில் உள்ள பிபிகுளம் உழவர் சந்தையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதனால், அவர்களை சமூக இடைவெளிவிட்டு காய்கறி வாங்குவதற்கு மாநகர போலீஸார் ‘ஆளில்லாத குட்டிவிமானம்’ மூலம் கண்காணித்து ஒருநபர் 15 நிமிடங்கள் மட்டும் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரையில் ‘கரோனா’வுக்கு உயிரிழந்தவர் அண்ணாநகரை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த உழவர் சந்தை மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு அருகில் உள்ள பிபிகுளம் உழவர் சந்தையில் குவிக்கின்றனர்.

அதனால், பிபிகுளம் உழவர் சந்தையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இன்று காலை மட்டும் காய்கறிகள் வாங்குவதற்கு சுமார் 2 கி.மீ., தூரம் மக்கள் வரிசையில் நின்றனர்.

மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளிவிட்டு காய்கறிகள் வாங்கவும் பீபீ குளம் உழவர்ச ந்தையில் மாநகரகா காவல்துறையினர் ‘ஆளில்லா குட்டி விமானம்’ கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உழவர்சந்தை அலுவலர் ஸ்ரீதர் கூறுகையில், ‘‘சுகாதாரத்துறை கூட்டத்தைத் தவிர்க்கச் சொல்லியுள்ளதால் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. உழவர்சந்தையில் மொத்தம் 100 கடைகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிக்கின்றனர்.

அவர்களை உழவர் சந்தை முன் வரிசையில் நிற்க வைத்து, ஒரு கடைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் காய்றிகள் வாங்குவதற்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

சந்தைக்குள்ளேயும், வரிசையிலும் சமூக இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இதை மக்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை உழவர் சந்தை அலுவலர்களும், போலீஸாரும் இணைந்து கண்காணிக்கின்றனர்.

உதவி ஆணையர் காட்வின் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 20 எஸ்.ஐ.க்க்ள் உள்பட போலீஸார் உழவர் சந்தையை ஆளில்லாத குட்டி விமானம் மூலம் மக்களின் சமூக இடைவெளியே கண்காணிக்கின்றனர்.

‘கரோனா’வுக்கு இறந்தவர், அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர் என்பதால் சமூக இடைவெளி மிக மிக அவசியமானது. யாராவது இதை மீறினால் உடனே போலீஸார் அவர்களை வெளியேற்றிவிடுகின்றனர். அதனால், மக்கள் கட்டுப்பாடுகளுடன் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in