

ரிசர்வ் வங்கி ஆளுநர், அடுத்த 3 மாதங்களுக்கு வங்கி மாத தவணை தள்ளி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்தவர் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன். அதுபோல், மத்திய அரசு எம்பிக்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை ‘கரோனா’ மருத்துவ சிகிச்சைப் பணிகளுக்கு தாராளமாக ஒதுக்க விதிகளை தளர்த்தி உத்தரவிட்டது. உடனே தமிழகத்தில் முதல் எம்பியாக சு.வெங்கடேசன், தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.55.17 லட்சம் நிதியை ஒதுக்கினார். இவரை தொடர்ந்து தமிழக எம்பிக்கள் ஒருவர் பின் ஒருவராக தாராளமாக ‘கரோனா’ சிகிச்சைக்கு நிதி ஒதுக்கத் தொடங்கினர். சு.வெங் கடேசன் எம்பியின் இந்த நடவ டிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:
பைக்குகல் வாங்கியவர்கள் முதல் மிகப் பெரிய தொழில் நடத்துவோர் வரை அடுத்த மாதம் எப்படி வங்கி கடனைச் செலுத்தப் போகிறோம் என்ற கேள்வியே அவர்கள் முன் நின்றது. கடனை செலுத்தமுடியாவிட்டால் வாழ்நாள் முழுவதும் வங்கிக் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும்.
வங்கிகளின் கட்டுப்பாடு அந்தளவுக்கு உள்ளது. அதனால், வங்கித் தவணைக் காலத்தை 3 மாதத்துக்கு விடு முறைவிட வேண்டும் என நிதி அமைச்சர், செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மற்ற கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தத் தொடங்கியதால் தற்போது நான் வைத்த கோரிக்கை அடிப்படையில் 3 மாதம் வங்கி தவணை தள்ளி வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறி வித்துள்ளார். அவருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.