

கரோனாவால் பாதிக்கப் பட்டோர் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டோருக்கு உதவும் வகையில் திருச்சி தனியார் நிறுவனம் தானியங்கி ரோபோக் களை உருவாக்கி உள்ளது.
திருச்சியில் இயங்கிவரும் புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற ரோபோட்டிக் நிறுவனம் தாங்கள் தயாரித்து வரும் “பாஷி”என்ற ரோபோட்டை, கரோனா நோயாளி களுக்கு உதவும் வகையில் வடி வமைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர்கள் ஹரிபிரகாஷ், இந்துமதி ஆகியோர் கூறியது: மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் விதமாக மனித வடிவிலான பாஷி ரோபோட் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதை மொபைல் போன் மூலம் இயக்கலாம்.
மேலும் “பாஷி மெடிக்” என்ற ரோவர் வகையிலான ரோபோட் 20 கிலோ எடையுள்ள பொருளை ஒரு கி.மீ. தூரம் வரை எடுத்துச் செல்லும். மருத்துவமனைகளில் இந்த ரோபோட்டை பலவிதமாக பயன்படுத்தலாம். தற்போது 10 ரோபோக்கள் உள்ளன. ஒரு நாளில் 2 ரோபோக்களை உரு வாக்கலாம். தேவைப்படும் நேரத்தில் மருத்துவப் பணிக்கு கட்டணமின்றி வழங்கத் திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.