தேனி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு

தேனி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு
Updated on
1 min read

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி எம்பி. ரவீந்திரநாத்குமார் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். இந்நிதி மூலம் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் பல்வேறு மருத்துவச் சாதனங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in