கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஈரோட்டில் 5 ஆக உயர்வு- பெண் மருத்துவரும் பாதிப்பு: ரயில்வே மருத்துவமனை மூடல்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக சீல் வைக்கப்பட்ட ஈரோடு கொங்காளம்மன் கோயில் வீதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக சீல் வைக்கப்பட்ட ஈரோடு கொங்காளம்மன் கோயில் வீதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Updated on
1 min read

ஈரோட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பெண் மருத்துவர் ஒரு வரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த 7 பேரில், இரு வருக்கு கரோனா வைரஸ் இருந் ததையடுத்து, அவர்களுக்கு பெருந் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டினர் நடமாடிய 9 வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. அப்பகுதியில் 295 குடும்பங்களைச் சேர்ந்த 1,118 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் சந்தேகத்தின் பேரில் 28 பேருக்கு, பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் நடத்தப் பட்ட சோதனையில், 3 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், மாவட் டத்தில் கரோனா வைரஸ் இருப்ப வர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந் தது. ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே மருத்துவமனையில் பணி புரிந்து, கோவை மாவட்டம் போத் தனூருக்கு மாறுதலாகி சென்ற பெண் மருத்துவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதனால், ஈரோடு ரயில்வே மருத்துவமனை தற்காலிக மாக மூடப்பட்டது. மருத்துவ மனையில் இருந்த உள்நோயாளி கள் அருகிலுள்ள தனியார் மருத் துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனை அமைந்துள்ள ரயில்வே காலனி முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர் பணியிட மாறுதலில் பணிபுரிந்த கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவ மனையும் நேற்று மூடப்பட்டது.

ஈரோடு ஆட்சியர் சி.கதி ரவன் கூறும்போது, “மாவட்டம் முழுவதும் 1,600-க்கும் மேற் பட்டவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஈரோடு உழவர் சந்தை பன்னீர்செல்வம் பூங்கா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றப் படவுள்ளது”என்றார்.

ஈரோடு மாவட்ட காவல் துறையின் ‘ஹலோ சீனியர்ஸ்’ திட்டத்தில், முதியோர்களிடம் இருந்து 247 அழைப்புகள் வந்தது. அதன்படி முதியோர் களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள், மளிகை மற்றும் காய்கறிகளை அவர்கள் வீட் டுக்கே கொண்டு சென்று போலீ ஸார் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in