

கர்நாடகாவில் இருந்து கிருஷ்ண கிரிக்கு நடந்து வந்த 137 கூலித் தொழிலாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளில் வேலை பார்க்கின்றனர். கூலித் தொழிலாளர்களாக கர்நாடக மாநிலத்துக்குச் சென்றவர்களில் பலர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதனால் வேலையும் இல்லாமல், அங்கேயே தங்கி இருக்கவும் முடியாமல் இவர்கள் தவித்தனர். வருமானம் இல் லாத நிலையில், பேருந்து போக்கு வரத்து வசதியும் இல்லாததால் தொழிலாளர்கள் குழந்தைகள், பெண்கள், உடமைகளுடன் கர் நாடகாவில் இருந்து நடந்தே தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
137 பேர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியை வந்தடைந்தனர். 100 கிமீ தூரம் நடந்து வந்தவர்கள் குறித்து ஆட்சியர் பிரபாகர், மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் ஆகியோருக்கு தகவல் தெரிந்தது. தொழிலாளர்களை சொந்த ஊருக்கு கொண்டு விட அரசுப் பேருந்து வரவழைக்கப்பட்டு, அனுப்பி வைத்தனர். முன்னதாக, 137 பேருக்கும் காய்ச்சல் பரி சோதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பி குமார், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், நகராட்சி ஆணையர் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.