கரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு

கரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு
Updated on
1 min read

கரோனா தொற்று பரவுதல் தடுப்பு நடவடிக்கை மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் கரோனா பரவுதல் சமுதாயப் பரவல் நிலையை நோக்கிச் செல்லாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், உள்துறைச் செயலர் பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதவிர ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா பிரிவை முதல்வர் பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in