Published : 19 Aug 2015 08:50 AM
Last Updated : 19 Aug 2015 08:50 AM

வேலைநிறுத்தம் நீடிப்பு: தொழிலாளர் நல தீர்ப்பாயத்தை அணுக என்எல்சி நிர்வாகம் முடிவு

என்எல்சி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று 30-வது நாளை எட்டுகிறது. இதையடுத்து, தொழிலாளர் நல தீர்ப்பாயத்தை (டிரிபியூனல்) நாட என்எல்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஊதியமாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி என்எல்சி யில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் ஜூலை 20-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத் தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கிடையே தொழிலாளர்களும் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நெய்வேலியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 11 மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர். 6 பேரை கைது செய்தனர். கைதானவர்களை ஜாமீனில் வெளியில் எடுக்கும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், ஆக. 14 முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய தொழிலாளர்களும் ஆக. 17-ம் தேதி இரவுடன் அந்த போராட்டத்தை முடித்துக் கொண்டனர். எனினும், நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.

தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருவதால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து என்எல்சி நிர்வாகத் துறை அதிகாரிகளை கேட்டபோது, “இதுவரை யாரை யும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வில்லை. தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி வேண்டு கோள் விடுத்துள்ளோம். வேலை நிறுத்த போராட்டம் 30-வது நாளை எட்டியிருப்பதால், அடுத்த கட்டமாக தொழிலாளர் நல தீர்ப்பாயத்தை நாடுவதைத் தவிர எங்களுக்கு (என்எல்சி நிர்வாகம்) வேறு வழியில்லை. தீர்ப்பாயத்துக்கு சென்றால் என்னவாகும் என்பது தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தெரியும். தொழிற்சங்கங்கள் இதை உணர்ந்து தொழிலாளர்களை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, அதிமுக தொழிற்சங்க செயலாளர் உதயகுமாரிடம் கேட்டபோது, “என்எல்சி தொழிலாளர்கள் பிரச் சினைத் தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி யிருக்கிறார். மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தொகுதி எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோரும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் பிரதமரை சந்திக்க இருக்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x