

கரோனா வைரஸ் தடுப்புக்கென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. மாவட்ட எல்லையில் 19 வழித்தடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தி போலீஸார் கண்காணிக்கின்றனர்.
மதுரை நகரின் பல இடங்களில் சம்பந்தமின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து போலீஸார் நேற்று அபராதம் விதித்தினர். வாகனங்களும் பறிமு தல் செய்தனர்.
மருத்துவம் உட்பட அத்தி யாவசிய பணிகளுக்கு செ ல்வோர் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்தால் போதும் அனுமதிக்கலாம் என்றபோதிலும், செவிலியர் பணிக்கு வாடகை ஆட்டோ, கார்களில் சென்றால், சம்பந் தப்பட்ட வாகனங்கள் மீது தடை உத்தரவை மீறுவதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.
சொந்த வாகனங்களில் அழை த்துச் சென்றாலும், நிறுத்தி கெடு பிடி செய்கிறார்கள். சொந்த வாகனமின்றி வாடகை வாகனங் களில் பயணிக்க, தங்களது துறை அதிகாரிகளிடம் கடிதம் வாங்கி வரவேண்டுமா என, விளக்கம் கேட்டால் அதற்கு போலீஸார் பதிலளிக்க மறுக்கின்றனர். இதற்காக போலீஸாருடன் வாக் குவாதம் செய்யும் சூழலும் மருத்துவப் பணியாளர்களுக்கு நேர்கிறது. இது போன்ற போலீ ஸாரின் பல்வேறு நெருக் கடியால் செவிலியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்கு செல்வோர் அதிருப்தி அடைகின்றனர்.
போலீஸார் கூறுகையில், கரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் சூழலில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு எனக் கூறி சிலர் பொய் சொல்லி செல் கின்றனர்.
கெஞ்சி,பொறுமையாக கூறினாலும் கேட்க மறுப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. குறித்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதாகத் தெரிந்தால் அதி காரிகள் மைக் மூலம் எங்களை எச்சரிக்கின்றனர். இதுவரை நகரில் 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தில் எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட இடங்களில் சிலர் கைதா கியுள்ளனர். வேறு வழியில்லை. எதிர்வரும் நாட்களிலும் நட வடிக்கை தொடரும்.
பொதுமக்கள் நிலைமையை புரிந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், என்றனர்.