Published : 27 Mar 2020 07:45 AM
Last Updated : 27 Mar 2020 07:45 AM

வைரஸ் முன்னெச்சரிக்கையாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு வீட்டில் முழு ஓய்வு: சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் உத்தரவு

கரோனா நோய் தொற்றை தவிர்க்கும் வகையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு பணி வழங்காமல் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி இணை ஆணையர் ஆர்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் குழுமி இருந்தால் நடவடிக்கை என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை கிழக்குமண்டல காவல் இணை ஆணையர்ஆர்.சுதாகர் தனது எல்லைக்கு உட்பட்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், ‘144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இருக்காது. எனவே, குறைந்த அளவு காவலர்களை வைத்துக் கொண்டு மீதம் உள்ளவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். யாரும் தொடர்ந்து இரவு பணி செய்யக் கூடாது. தாராளமாக விடுப்புகொடுங்கள். அனைத்து போலீஸாரும் முகக்கவசம் அணிய வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கும் பணி வழங்காமல் வீட்டில் முழு ஓய்வு எடுத்துக் கொடுங்கள்.

காவல் நிலையத்தில் புகார்அளிக்க வரும் பொதுமக்கள் கை, கால், முகங்களை சுத்தம் செய்ய தண்ணீர், சோப்பை காவல் நிலையத்தின் முன்பு வையுங்கள்' என அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x