

கரோனா வைரஸ் தொற்று பரவா மல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. உத்தரவை மீறு வோர் மீது அந்தந்த மாநில போலீ ஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பில் வசித்து வரும் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார், தனது வீட்டு முன்பு காய்கறி விநியோகம் செய்துள்ளார்.இதனால் அங்கு கூட்டம் கூடியுள்ளது. போலீஸார் விரைந்து சென்று மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
மேலும், மக்கள் கூட்டத்தை கூட்டியதால் ஜான்குமார் எம்எல்ஏ மீது இந்திய தண்டனைச் சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட் டம், தொற்று நோய் பரவு தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ், உரு ளையான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
‘‘ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தது; கூட்டத் தைக் கூட்டியது என புதுச் சேரியில் 45, மாஹேயில் 4, ஏனாமில் 16 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். அதில், எம்எல்ஏ மீதான வழக் கும் ஒன்று’’ என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, “சட்டத்தின்முன் அனைவரும் சமம்;. சட்ட விதிகளை கடைபிடிப்பது சட்டத்தை உருவாக்குபவர்களின் பெரிய பொறுப்பு” என்று ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள் ளார்.