Published : 26 Mar 2020 09:34 PM
Last Updated : 26 Mar 2020 09:34 PM

கட்டிடங்களை இடிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு:  ஏப் 30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா வரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றவும், கட்டிடங்களை இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடைகள் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றவும், இடத்தை காலி செய்யவும் கட்டிடங்கள் இடிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தி இருக்காவிட்டால் ஏப்ரல் 30 வரை அந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தடை உத்தரவுகள் காலாவதியாவதால் நீட்டிக்க கோரி வந்த கோரிக்கைகளை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமீன் உத்தரவுகளும், பரோல் உத்தரவுகளும் நீட்டிக்கப்படுகிறது, தடை உத்தரவுகள் நீட்டிப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அரசும், சம்பந்தப்பட்டவர்களும் உரிய நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம்.

ஊரடங்கு காரணமாக நீதிமன்றத்தை நாட முடியாது என்பதால் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x