Published : 26 Mar 2020 08:59 PM
Last Updated : 26 Mar 2020 08:59 PM

கரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன? -கண் மருத்துவரின் விளக்கம்

கரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அதுவும் ஒரு அறிகுறியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை:

“உலகளாவிய ஒரு அவசரநிலை பேரிடராக இப்போது உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸால் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் நிச்சயமற்ற, குழப்பமான நிலை குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

இந்த நச்சுயிரியானது, தற்போது 2019 நாவல் கரோனா வைரஸ் என (2019-nCoV) என குறிப்பிடப்படுகிறது. இது ஏன் கரோனா வைரஸ் என அழைக்கப்படுகிறது. லத்தீன் மொழியில் கரோனா என்றால் கிரீடத்தைக் குறிக்கும். கிரீடத்தின் மேற்பரப்பின் மீது இருக்கிற கூர்முனைகள் போல இந்த வைரஸ் மீதும் தொடர்ச்சியான கூர்முனைகள் இருப்பதால் இந்த வைரஸ்க்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் தொடங்கி, உலகின் எண்ணற்ற நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுப்பதிலும் மற்றும் அந்த தொற்றுப்பரவலிலும் கண்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றக்கூடும்.

இது எப்படி பரவுகிறது?

இந்த வைரஸ், நுண் திரவத்துளிகளால் / தொடர்பால் / காற்றிலுள்ள ஆதாரத்தால் பரவக்கூடும்.

* தொற்று பரவலுக்கான மிக பொதுவான வழிமுறையாக இருப்பது சுவாச உறுப்புகளிலிருந்து வெளிவரும் நுண்திரவ துளிகளாகும். (இருமல் மற்றும் தும்மல்)

* வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள ஒரு பொருளை , பொருளின் மேற்பரப்பை மக்கள் தொடும்போது மற்றும் தங்களது கண்கள்/மூக்கு/வாயை தொடுவதன் மூலம் தொற்றுப்பரவல் நிகழக்கூடும்.

* விழிவெண்படல அழற்சி (மெட்ராஸ் ஐ)நோய் பாதிப்புடன் ஏரோசால் தொடர்பின் வழியாகவும் மற்றும் கண்ணிலிருந்து வெளிவரும் சுரப்புகளின் வழியாகவும் தொற்றுப்பரவல் நிகழ சாத்தியமிருக்கிறது.

* அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த நபர்களுக்கு சுவாசப்பாதைதொற்று அறிகுறிகளோடு விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நோயின் வெளி அடையாளங்கள்

எந்தவொரு அறிகுறிகளும் வெளிப்படாத நிலையிலும் கூட தொற்றை பரப்பும் திறனுள்ள நபர்களாக சில நோயாளிகள் இருக்கக்கூடும். வழக்கமாக இத்தொற்று அறிகுறிகள், தொற்றுக்கு வெளிப்பட்ட நேரத்திலிருந்து 2-14 நாட்கள் என்ற காலஅளவிற்குள் தென்படக்கூடும்.

இத்தொற்றானது விழிவெண்படல அழற்சியை விளைவிக்கக்கூடும்:

விழிவெண்படல அழற்சியானது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதன் முதன்முதல் சுட்டிக்காட்டலாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள சாத்தியமுள்ள நோயாளிகளை பரிசோதிக்கின்ற முதல் மருத்துவ பணியாளராக கண் மருத்துவ நிபுணர்கள் இருப்பதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது.

கொரோனா வைரஸ், விழிவெண்படல அழற்சியை விளைவிக்கிறது மற்றும் கண் இமைகளுக்கு உட்புறத்திலுள்ள திசு படலமான கண்அழற்சியோடு ஏரோசல் தொடர்பின் வழியாகவும் அநேகமாக இது பரவக்கூடும்.

விழி வெண்படல அழற்சியின் அறிகுறிகள் என்ன ?

கண்சிவத்தல், கண்ணிலிருந்து நீர்வடிதல், கண்எரிச்சல், வலி, பூளை சுரப்பு மற்றும் போட்டோஃபோபியோ ஆகியவை விழிவெண்படல அழற்சியின் அறிகுறிகளாக இருக்கின்றன. தொற்று பாதிப்புள்ள கண்ணிலிருந்து வெளிவரும் சுரப்பு, தொற்று பரவலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.

சுவாசப்பாதை தொற்றின் அறிகுறிகளுள், காய்ச்சல், இருமல், தொண்டைவலி, மூச்சுவிடுவதில் சிரமங்கள், தலைவலி ஆகியவைகள் உள்ளடங்கும். தீவிரமான தொற்று பாதிப்பானது, நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு மற்றும் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கலாம்.

நாம் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

முதலாவதாக மற்றும் முக்கியமாக. பீதியடையாதீர்கள். எளிமையான தூய்மை நடவடிக்கைகளை பின்பற்றுவது பாதுகாப்பை வழங்கும். கொரோனா வைரஸ் மற்றும் பிற நச்சுயிரி தொற்றுகள் நமக்கு வராமல் தடுக்கும்.

* குறைந்தது 20 நொடிகளுக்காவது சோப்பு மற்றும் நீரை கொண்டு அடிக்கடி உங்கள் கைகளை கழுவவும். ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசரையும் பயன்படுத்தலாம்.

இதுவரை இந்த ரைவஸ் -க்கு எதிர்ப்புத்திறன் உள்ள மருத்துவ சிகிச்சையோ அல்லது தடுப்பூசி மருந்தோ கண்டறியப்படவில்லை. நோய் அறிகுறிகளை நிர்வகிப்பதும் மற்றும் வைரஸ் செயல்படும் நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் அத்தியாவசிய அம்சங்களுக்கு ஆதரவளிக்கும் சிகிச்சையை வழங்குவது மீதும்தான் கூர்நோக்கம் காட்டப்பட்டு வருகிறது.

எனவே, தொற்று பாதிப்புள்ள நபர்களை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது மட்டுமே இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

இந்த வைரஸ் -ன் புதுமையான பரவும் பண்பு மற்றும் ஆபத்தை கருத்தில்கொண்டு பார்க்கும்போது அவசியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது உடல்நல பராமரிப்பு சேவை வழங்குபவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் இருக்கிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எழுதியவர்: டாக்டர். ப்ரீத்தி ரவிச்சந்தர், கண் மருத்துவவியல்,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x