2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு

2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு
Updated on
1 min read

2015 முதல் 2018 வரை அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப் பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைப்படி தனியார் பள்ளிகளுக்கு அவற்றின் அடிப் படை வசதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

அந்த வகையில், 2015-16, 2016-17, 2017-18 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக (அரியலூர், புதுக் கோட்டை, தூத்துக்குடி தவிர) பள்ளிகளுக்கான கட்டண விவரம் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) நேற்று வெளி யிடப்பட்டது. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையில் கல்வி ஆண்டு வாரியாக குறிப்பிட்ட தனியார் பள்ளிகளுக்கான கட் டண விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள் ளலாம்.

எல்கேஜி-க்கு ரூ.46,948.

சென்னை மாவட்டத்தில் 76 தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, எல்கேஜி படிப்புக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5900, அதிகபட்ச கட்டணம் ரூ.46,948 ஆகும். பிளஸ் 2 படிப் புக்கு குறைந்தபட்சம் ரூ.3500-ம் அதிகபட்சம் ரூ.52,393-ம் கட்டண மாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in