கரோனா வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் நேற்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம். படம்:ம.பிரபு
தாம்பரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வரிசையில் நின்று உணவு வாங்கும் மக்கள்.படம்: எம்.முத்துகணேஷ்
அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை விமான நிலைய வளாகம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆள் நடமாட்டமின்றி காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலை.
புறநகரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களை செங்கல்பட்டு - சென்னை எல்லையான பெருங்களத்தூர் பகுதியில் போலீஸார் விசாரித்து பின்னர் அனுமதிக்கின்றனர். பல்வேறு காரணங்களைச் சொல்லி நகருக்குள் வரும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். படங்கள்: எம். முத்துகணேஷ்