Published : 26 Mar 2020 06:28 AM
Last Updated : 26 Mar 2020 06:28 AM

கோயம்பேடு காய்கறி சந்தை நாளை முதல் 2 நாட்களுக்கு மூடப்படும்: பீன்ஸ் விலை ரூ.70-ல் இருந்து ரூ.30 ஆக குறைவு

சென்னை

கோயம்பேடு காய்கறி சந்தை நாளைமுதல் 2 நாட்களுக்கு மூடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காய்கறிகளின் விலை நேற்று முன்தினத்தைவிட நேற்று குறைவாக இருந்தது. ஒரு கிலோ பீன்ஸின் விலை ரூ.70-ல் இருந்து ரூ.30 ஆக குறைந்தது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்ட அத்தி யாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக் குவித்தனர்.

இதன் காரணமாக கோயம் பேடு காய்கறி சந்தையில் காய் கறிகளின் விலை நேற்று முன் தினம் அதிகரித்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டதை தொடர்ந்து, கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும் என்றும் பொதுமக்கள் கோயம் பேடு சந்தைக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும் அறிவிக் கப்பட்டிருந்தது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மக்கள் கூட்டம் குறை வாக காணப்பட்டது. மொத்த வியாபாரிகள் மட்டும் சரக்குகளை வாங்கிச் சென்றனர். இதனால், காய்கறிகளின் விலை நேற்று சற்று குறைந்திருந்தது.

இதுகுறித்து, கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:

கோயம்பேடு சந்தையில் காய் கறி, கனி மற்றும் மலர் ஆகிய வற்றை விற்பனை செய்வதற்காக 3,189 கடைகள் உள்ளன.

தினமும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து 500 லாரிகள் மூலம் 5 ஆயிரம் டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனைக்கு வரும். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று 4 ஆயிரம் டன் காய்கறிகள் மட்டுமே வந்தன.எனினும், விலையில் பெரிய மாற் றம் ஏற்படவில்லை. சில காய் களின் விலை குறைந்திருந்தது. இரு தினங்களுக்கு முன்பு மொத்த விலையில் கிலோ ரூ.70-க்கு விற் பனையான பீன்ஸ், கிலோ ரூ.30க்கு விற்பனையானது. ரூ.40-க்கு விற் பனையான கேரட் ரூ.20-க்கும், ரூ.30-க்கு விற்பனையான உருளைக்கிழங்கு ரூ.25-க்கும், ரூ.30-க்கு விற்பனையான உஜாலா கத்திரிக்காய் ரூ.25-க்கும், வரி கத்திரிக்காய் ரூ.30-ல் இருந்து ரூ.25-க்கும் விற்பனையானது. அதேபோல், பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.25-க்கும், சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்காத வகையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி கோயம் பேடு சந்தையை தொடர்ந்து திறக்க முடிவு செய்துள்ளோம். எனினும், தற்போது இங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். எஞ்சியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு வரும் 27, 28-ம் தேதிகளில் கோயம்பேடு சந்தையை மூட தீர்மானித்துள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை முதல் சந்தை வழக்கம்போல் செயல்படும். எனி னும், வரும் நாட்களில் சந்தையை தொடர்ந்து திறப்பது குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x