

தமிழகத்துக்கு இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2,09,276 பேர்பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில், 15,492 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர்.
வைரஸ் அறிகுறிகள் உள்ள 211 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 890 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 757 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. 110 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 23 பேரில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயதான பொறியாளர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளார். மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளார். மற்ற 21 பேரில் 19 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 2 பேர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.