மதுரையில் கரோனாவால் இறந்தவருடன் தொடர்பில் இருந்த மூவருக்கு தொற்று அறிகுறி: சிகிச்சைக்காக அரசு மருத்துமவனையில் அனுமதி

மதுரையில் கரோனாவால் இறந்தவருடன் தொடர்பில் இருந்த மூவருக்கு தொற்று அறிகுறி: சிகிச்சைக்காக அரசு மருத்துமவனையில் அனுமதி
Updated on
1 min read

தாய்லாந்திலிருந்து மதுரை வந்திருந்த மூவர் ‘கரோனா’ அறிகுறியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 15 பேர் அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வைரஸ் தனிப்பிரிவில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று அதிகாலை உயிரிழந்த மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூலமாகத்தான் மதுரை அண்ணா நகரை சேர்ந்தவருக்கு ‘கரோனா’ வைரஸ் தொற்று பரவியிருக்கக்கூடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மதுரையின் புறநகர் பகுதியில் தங்கியிருந்த இந்த தாய்லாந்து நாட்டுக்காரர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் மூவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வைரஸ் தொற்று தனிப்பிரிவில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டவர்களை சேர்த்து மொத்தம் 15 பேர் கரோனா தனிப்பிரிவில் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் ரத்தமாதிரி சேகரித்து, ‘கரோனா’ வைரஸ் தொற்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம் வந்தப்பிறகே மதுரையில் எந்தளவுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் பரவியிருக்கிறது என்ற விவரம் தெரிய வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in