Published : 25 Mar 2020 08:40 AM
Last Updated : 25 Mar 2020 08:40 AM

தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோரின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்: திருச்சியில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் இன்று முதல் செயல்படும்

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட் டங்களில் தொடர் மருத்துவ கண் காணிப்பில் உள்ள 1,771 பேரின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் திருச்சியில் இன்று முதல் செயல்பட உள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

மார்ச் 1-ம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணிகளில் தனிமைப்படுத்துதல் கண்காணிப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்ட 483 பேரின் வீடுகளிலும் ‘தனிமைப் படுத்தப்பட்ட வீடு’ என்ற எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் கரோனா தனி வார்டில் சிகிச்சையில் உள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு நிலையை ஆய்வு செய்யும் விஆர்டிஎல் ஆய்வகம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நாளை (இன்று) முதல் செயல்படத் தொடங்கும் என்றார்.

இத்தாலியிலிருந்து வந்த மாணவி...

கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று கடந்த 14-ம் தேதிக்குப் பிறகு ஊர் திரும்பிய கரூர் நகராட்சியில் வசிக்கும் 33 பேரின் வீடுகள் உள்ளிட்ட 57 பேரின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிக்கும் வகையில் அவர்களின் வீடுகளில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று நடைபெற்றது.

இப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கரூர் மாவட்டத்திலிருந்து வடஇந்தியா சுற்றுலா சென்று திரும்பிய 42 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப் படுவார்கள்.

இத்தாலியில் இருந்து கரூர் மாவட்டம் திரும் பிய மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மாணவி அவரது பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஏற்கெனவே 4 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.

பெரம்பலூர், அரியலூரில்...

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேற்று செய்தியாளர் களிடம் கூறியபோது, “மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு வந்த 166 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 140 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவத் துறையினரின் தொடர் கண் காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா நேற்று செய்தியாளர் களிடம் கூறியபோது, “அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத் துக்கு கரும்பு வெட்டும் தொழிலுக் காக வந்திருந்த மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 67 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில், 8 பேருக்கு மட்டும் சாதாரண காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல, அரியலூர் மாவட் டத்திலிருந்து பணி நிமித் தமாக வெளிநாடுகளுக்குச் சென்று, தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ள 236 பேரில் 32 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.

தொடர் கண்காணிப்பில் 843 பேர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, எஸ்.பி அருண்சக்திகுமார் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய போது, “வெளிநாடுகளில் இருந்து வந்த 843 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளவர் களின் கையில் முத்திரை குத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x